Sunday, 3 December 2006

நர்ஸம்மா...

சோகமே உருவாய் அழுதபடி சங்கீதா, கணவன் ரமேஷின் தோளில் சாய்ந்திருந்தாள். இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகர கியூப்ஹால் ஹாஸ்பிடல் பரபரப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தது. அவர்களது ஏழு வயது மகள் நிலா ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியோடு சுவாசித்து கொண்டிருந்தாள்.
"என்ன கொடுமைங்க இது, அழகா விளையாடிக்கிட்டிருந்தவ இப்படி" மேலும் பேசமுடியாமல் விம்மினாள் சங்கீதா. "இதுக்கலாம் போய் அழுதுக்கிட்டு", உள்ளுக்குள் வேதனையோடு அவளை தேற்றினான் ரமேஷ்.
செல் கணைத்தது, நண்பன் சுகுமார், "டேய் இப்பதாண்டா கொவற்றியிலேந்து, வெஸ்ட் மிட்லாண்ட் டிரைன்ல வந்தேன், ஏதோ முக்கியமா வரசொன்னே, எங்க இருக்கடா?" , விலாசம் கேட்டதும் அதிர்ந்தான். "நீ இங்க வாடா, சொல்றேன்" கட் பண்ணிணான் ரமேஷ்.
காரிடாரில் நடந்தபடி நிலாவின் இதய கோளாரை சுகுமாருக்கு விளக்கினான். "நான் தைரியமாத்தான் இருக்கேன், கீதாதான் ரொம்ப நொடிஞ்சுட்டா" என்றான்.தனது கம்பெனி விஷயமாய் ஜெர்மனி செல்ல வேண்டியதை சொன்னதும் "இத பத்தி நீ கவல படாதே, லீவு போட்டுட்டு நான் இருக்கேண்டா,நீ கெளம்பு" என ஆறுதலாய் சொன்ன சுகுமாரிடம் , " டேய் சுகு, எல்லாம் நான் செஞ்ச பாவம்டா, நான் ஏங் காலேஜ் ஃபிரண்ட் பிரியாவுக்கு செஞ்ச காதல் துரோகத்துக்கு, ஆண்டவன் குடுத்துட்டாண்டா", என்ற ரமேஷிடம், "விடுடா நீ, பழசெல்லாம் பேசிக்கிட்டு" என்றான் சுகுமார்.
நான்கு நாள் கழித்துவந்த கணவனிடம் மகிழ்ச்சியாய் சொன்னால் சங்கீதா, "இப்ப நல்லா இருக்காங்க நிலா, எல்லாம் அந்த நர்ஸ்தாங்க, சொந்த பிள்ள மாதிரி பார்த்தாங்க, அவங்க மூணு நாளா தூங்கவேயில்ல, நாம போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம், கடவுளா பாத்து அனுப்பியிருக்கான், அவங்க கோயமுத்தூராம்,ஏன் வயசு தான் இருக்கும், பாவம் இன்னும் கல்யாணமாகல,சுகுமாரண்ணன் மூணாவது மாடியில டிபன் வாங்க போனாங்க". திரும்பியவுடன் நுழைந்தான் சுகுமார். "ரொம்ப தேங்ஸ்டா சுகு" என தேநீரருந்திக் கொண்டிருந்த
டம்ளரோடு நண்பனைக் கட்டிக்கொண்டான். "ஏங்க, இவங்க தாங்க அந்த நர்ஸம்மா", என சங்கீதா நர்ஸை அறிமுக படுத்தியபோது டக்கென்று நழுவிய டம்ளர் தரையிலே சிலீரென நொறுங்கியது, பித்து பிடித்தவனாய் விக்கித்த ரமேஷ் முன்பு நர்ஸம்மா, குழப்பமாய் நின்றனர் சங்கீதாவும், சுகுமாரும். பாவம் அவர்களுக்கு தெரியாது, நர்ஸம்மா தான் பிரியா என்று.

Tuesday, 28 November 2006

தமிழால் ஆட்சியை பிடிக்க முடியுமா?

" தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் தான் ஆளுகிறது, தமிழ் விற்பன்னர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்கள்",சிலர் இப்படி சொல்வதுண்டு, இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
தமிழும் ஓர் அம்சம், அதன் பங்களிப்பு என்றும் உண்டு, இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் ஆட்சியை பிடிக்கும், தமிழ் வளமை உள்ளவர்கள் மட்டுமே ஆட்சியை பிடிப்பார்கள் என்றிருந்தால் "வார்த்தை சித்தர் வலம்புரிஜான்" என்ற மாபெரும் தமிழ் மேதை ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பார்,மாறாக அரசியல் அனாதையாக இறந்திருக்க மாட்டார்.

கலைஞர் ஒரு ஜனநாயக விரோதி???

தி.மு.க அரசு ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது, அவரது பேரன் கலாநிதி மாறன் இந்தியாவின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். வெளியிலிருந்து பார்த்தால் சாதாரணமாக தெரியும் இந்த விசயம் சர்ச்சைகுறியது தான். ஏனென்றால் அவரது துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாண MEDIA-Journalism( பத்திரிக்கை துறை). ஒரு ஆட்சியாளர் தன்னிடம் இருக்கும் எழுத்து ஆயுதத்தை பயன்படுத்தி உண்மைகளை மறைக்க முடியும். கலைஞருக்கு சாதகமானவர் கலாநிதி என்பது வெளிச்சம்.
இது நியாயமா? என்ற நம்முடைய கேள்விக்கு முன்னர் நாம் பார்க்க வேண்டிய விசயங்கள் சில நம்முன்னே கிடக்கின்றன. உதாரணமாக, ஒரு சாமி சிலையை நல்லெண்ணத்தின் காரணமாக இடம் மாற்றி வைக்கும் ஒரு சிறுபான்மை சகோதரரை "தீவிரவாதி"யாகவும், அதே செயலை கெட்ட நோக்கோடு ஒரு இந்து செய்தால் "குறும்புக்கார பக்தராகவும்" சித்தரிக்கும் "தினமலர்" போன்ற உயர்ந்த(???!!) பத்திரிக்கைகள், "சாணக்கி "யரும் ", சந்திர குப்த மெளரி"யனும்" " என ஊசி ஏற்றும் "மதன்" போன்ற "உயந்த(??!!)" பத்த்ரிக்கையாளர்களும், "கண்ணகி சிலையை கரடி பொம்மையோடு சாமர்த்தியமாக கையாளும் "ஞானி" போன்ற நல்லவர்(???)களும், "பரம்பரை"யுத்தம் என முழக்கமிடும் ஜெயலலிதாக்களும், "சோ" போன்ற பார்ப்பன நீதிமான்(???)களும், பத்திரிக்கை உலகிலிருந்து என்று வெளியேறுகிறார்களோ... அன்று உடனடியாக கலாநிதி மாறன் தன் மூட்டை முடிச்சிகளோடு கோபலபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் கலைஞரிடம் குமுதம் துளைத்தபோது "ஆளுங்கட்சிக்கு பரிவட்டம் கட்டுவதை பத்திரிக்கைகள் தவிர்க்க வேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்தினார். அவருக்கு வேறு வழியில்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது, தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் செய்திகளை வாசிக்கும் போது........ ஆம், அவரது இந்த முடிவும் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க, கலாச்சார பேரழிவை தடுக்க அவர் நடத்தும் அரசியல் வேள்வி என புரிந்து கொள்ள முடிகிறது.

Monday, 27 November 2006

சாக்கர்(Soccer) வரமா? சாபமா?

சாக்கர் வரமா? சாபமா?
இன்றைய அய்ரோப்பிய நாடுகளில் பெரும் வசூல் குவிக்கும் விளையாட்டு இல்லை வரம்.
ஆம் இன்றைய அய்ரோப்பிய சந்தையில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வியாபாரம்.
இப்போது பெரும் பணமுதலைகள் முதலீடு செய்யும் சூதாட்ட களம். சிறிய வித்தியாசம் குதிரைகளக்கு பதில் மனிதர்கள். உலகின் பெரிய Soccer Clubs எல்லாம் Spain,England, Italy, Germany, France,Portugal ஆகிய நாடுகளை சேர்ந்தவைகள். இப்போது அமெரிக்காவிலும் Football Club Fashion பிரபலமாகி வருகிறது.
ஒவ்வொரு போட்டியும் கிட்டதட்ட 20,000 முதல் ஒரு லட்சம் வரை பார்வையாளர்களால் கண்டுகளிக்க படுகிறது. ஆனால் இதன் வசூல் நுழைவுச்சீட்டு மூலமாக மட்டும் வருவதில்லை. மாறாக பல வழிகளில் கொட்டுகிறது.
குறிப்பாக ஒவ்வொரு தனி Soccer வீரரும் விளம்பரங்கள் மூலமாக கோடிகோடியாக பணத்தை ஈட்டுகிறார்கள். அவர்கள் விளையாட்டு சம்மந்தமான விளம்பரங்களில் மட்டுமள்ளாது, அனைத்து துறை விளம்பரங்களிலும் நடிக்கிறார்கள். வங்கி, கார், எலக்ட்ரானிக்பொருட்கள், Insurance நிறுவனங்கள், முதலிய எந்த நிறுவத்தையும் விட்டுவைக்கவில்லை.
இதோடு நிற்கவில்லை இந்த வசூல் வேட்டை.... அந்த்ந்த கிளப்கள் வைத்துள்ள TV சானல்கள் (Ex Chelsea TV) அதன் பங்கிற்கு பட்டையை கிளப்புகின்றன.

பெரிய Sports goods நிறுவனங்களான Nike, Adidas, Puma போன்ற நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு பெரும் பணம் தந்து அவர்களது கிளப் Emblem( முத்திரை) களை வைத்து கொள்ளும் உரிமம் பெற்று TShirt,Jersey Shorts, Socks, Belt,Bags, என அத்தனையிலும் வசூலை குவிக்கின்றன.
அதோடு முடியவில்லை இந்த பண மழை, அடுத்ததாக Sports Channels களம் இறங்குகின்றன, ESPN, StarSports போன்ற சானல்கள் ஒளிபரப்பும் Nokia Football crazy, TigerFC Locker room, Here we go, Football with John Dykes, Final Score, Sports Center போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவர்ந்து விளம்பரங்கள் மூலம் பெரும் பொருளீட்டுகின்றன.
Natinal geography, Discovery போன்ற சானல்கள் தன் பங்கிற்கு "History of Soccer", "Maradona- Hero to Zero" போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றன.
Ronaldinho போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் வருட வருமானமாக தங்கள் கிளப்களில் மட்டும் USD $30 Million பெருகிறார்கள். மொத்தத்தில் தங்க முட்டையிடும் வாத்தாக மாறிவிட்டது SOCCER.